முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் இன்று காலை கவுன்சிலர் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் ஆலோசனையின் பேரில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் வழிகாட்டுதலின்படி கணேசன் காலனி 1 வது தெரு அந்தோணியார் கெபி எதிரே உள்ள முன்னாள் கவுன்சிலர் அன்பரசன் நினைவு தூண் முன்பு 50 வது கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் கலைஞரின் 102 வது பிறந்தநாளையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சிங்கராஜ், வட்ட பிரதிநிதி எம். வேல்மணி, செல்வம், ராஜேந்திரன், ராஜேஷ் லெட்சுமணன், மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், பிரையன்ட் நகர் பகுதி ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் செல்வக் குமார், பிரையன்ட் நகர் பகுதி விவசாய அணி அமைப்பாளர் பிரேம் குமார் தங்கராஜ், இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுஜிதா சரவணன், பகுதி விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் என். சீனிவாச குமார், பகுதி சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜான் ஸ்டீபன், திமுக பிரதிநிதி பழனி, மற்றும் கழக நிர்வாகிகள் 50 வது வார்டு கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

