தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், பராமரிப்பு டயாலிசிஸிக்கு உட்படும் அனைத்து நோயாளிகளுக்கும் புரதச்சத்து பால் 100 மில்லி, வேகவைத்த முட்டை 2, சுண்டல் 50 கிராம், உப்பு குறைவாக உள்ள பிஸ்கட் 2, ஆகிய புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கும் திட்டத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று காலை சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் சிறுநீரக செயல் இழந்தவர்கள் டயாலிசிஸ் பண்ணக்கூடிய நோயாளிகளுக்கு தினமும் புரசத்து வழங்கக்கூடிய உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி டயாலிசிஸ் பண்ணக்கூடிய நோயாளிகளுக்கு ஒரு டம்ளர் பால், பிஸ்கட், 50 கிராம் கொண்டைக்கடலை, உட்பட்ட பொருட்கள் அளவீடு செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தினமும் 22 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் பண்ணப்படுகிறது. அதனால் அந்த நோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் சத்தாண உணவு வழங்குவதன் மூலம் டயாலிசிஸ் பண்ணக்கூடிய நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதைத்தொடர்ந்து வருகின்ற ஜூன் 2 ம் தேதி பள்ளிக்கூடம் தொடங்க இருக்கிறது. பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் நாளே அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி சீருடைகள், மற்றும் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். அன்றைய தினமே புத்தங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட உள்ளது. அதேபோல அங்கன்வாடி மையங்களில் பயிலகம் கூடிய குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். உத்தரவிற்கிணங்க தயார் நிலையில் உள்ளது. அதேபோல ஜூன் 2 ம் தேதி அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பள்ளி சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்க இருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஒரு அங்கன்வாடி மையங்களில் 20 குழந்தைகள் என்று கணக்கீடு செய்யப்பட்டு அதன்படி வழங்க இருக்கிறோம். சமூக நலத்துறை மூலம் 1,54.000 சீருடைகள் (செட்) முதற்கட்டமாக கல்வித்துறைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டே பள்ளிகளுக்கு முதல் நாளே புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களுக்கு இந்த ஆண்டு முதல் தான் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் வரை 6500 க்கு மேல் ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றப்பட்டு புனரமைக்கப்பட்டு இருக்கிறது. என்று தெரிவித்தார். உடன் அரசு மருத்துவக்கல்லூரி முதல் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலேஷ், குழந்தைகள் நல மருத்துவர் பத்மநாபன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் பலர் உடன் இருந்தனர்.