தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது உடைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமலும், பொதுமக்கள் இடையூறாக மண் குவியல்களை ஆங்காங்கே குவித்து பொதுமக்கள் வாகனங்களில் பணிகள் நடைபெறும் பாதையில் செல்ல முடியாத நிலையில் பணிகள் நடைபெற்று வருவதாக பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,
இதனால் ஆத்திரம் அடைந்த 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெறக்கூடிய இடத்திற்கு நேரில் சென்று பாதாள சாக்கடை அமைக்கும் ஒப்பந்ததாரரை நேரில் சந்தித்து இதுபற்றி விளக்கம் கேட்ட போது அதிகாரிகள் சொல்வதை நாங்கள் செய்கிறோம் என்று அலட்சியமாக பதில் அளித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் சரவணகுமார் ஜே.சி.பி இயந்திர வாகனத்தின் சாவியை கைப்பற்றி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பணிகள் நடைபெறாமல் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் ஒப்பந்ததாரிடம் ஏற்பட்ட நீண்ட பேச்சு வார்த்தைக்கு இடையே மீண்டும் ஜே.சி.பி. இயந்திர வாகனத்தின் சாவி ஒப்பந்ததாரிடம் கவுன்சிலர் சரவணகுமார் ஒப்படைத்தார் .
அதைத்தொடர்ந்து பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதை உடனுக்குடன் சரி செய்து தர வேண்டியும், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக பணி செய்யவும், அறிவுறுத்தப்பட்டதின் பேரில் இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது வரும் நாட்களில் சரியான ஒத்துழைப்பு நல்குவதாகவும் ஒப்பந்ததாரர்கள் ஒப்புதல் அளித்ததின் பேரில் மீண்டும் அந்த இடத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
