தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ராணுவ வீரர்களுக்கு சல்யூட் மரியாதை செய்யும் நிகழ்ச்சி, தனசேகர் நகர் ஐஎன்டியுசி அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான பெருமாள்சாமி தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.
அதைத்தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர் ராமசாமியை கௌரவிக்கும் பொருட்டு மாலை மற்றும் சால்வை கள் அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் ராமசாமி 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் நடந்த யுத்தத்தை பற்றி விரிவாக விளக்கம் தந்தார். அவர் ஆற்றிய உரை தற்போது உள்ள இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று மிக்க செய்தியாக இருந்தது.
பின்னர் காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் பெருமாள்சாமி முன்னாள் ராணுவ வீரர் ராமசாமியின் தியாகத்தை நினைவு கூர்ந்து ராணுவ வீரர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உரிய மரியாதையாக சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து ஆசி பெறறார்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய ஒர்க்கஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், AICWC மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஜெயஜோதி, மீனவர் அணி மிக்கேல் குரூஸ், Sc/St முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், AICWC மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, AICWC மகிளா காங்கிரஸ் வசந்தி, மாநில பேச்சாளர் பார்த்திபன், வர்த்தக பிரிவு நேரு, இளைஞர் காங்கிரஸ் நம்பி சங்கர், கன்னிச்சாமி பாண்டியன், சேக்ஸ்பியர், பாலகிருஷ்ணன், எபனேசர், சுரேஷ்குமார், பிரைன்நாத், சாந்தகுமார் ஏசுதாஸ்,
சேவியர்மிஷ்யர், ஜோக்கின், ஜெயக்குமார், ஐஎன்டியுசியை சார்ந்த முத்து, ரமேஷ், சாரதி, கிரிதர், பாலன் மற்றும் ஏராளமான தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டார்கள்.
