தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை இந்த மண்ணில் இருந்து அகற்ற கடந்த 2018 மே 22 தேதி நடைபெற்ற எழுச்சி போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி இன்று காலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக சார்பில் வி.இ. சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் தன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டு தியாகிகளின் தியாகத்தை போற்றி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வர்த்தக அணி அபிநயா மூர்த்தி, மைக்கில் மதன், கிஷோர், அண்டோ, சதீஷ் குமார், மகேஷ், விஜய் சுபாகர், பாபு, கருப்பசாமி, மரியா, ஜீடி, திலகவதி, எம்.கே. பாலா, சுந்தர், மணிகண்டன், மயில், ராஜேஷ், மகாராஜா, செல்லப்பா, ரமேஷ் பாண்டி, மற்றும் தோழர், தோழிகள் உட்பட தவெக நிர்வாகிகள், பலர் கலந்து தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நினைவு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் கட்சி அலுவலகத்தில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.