Breaking News

நேருக்கு நேர் விவாதிக்க தயார் - தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முன்னாள் செயலாளர் டி.எஸ்.எப். கிப்சன் அணியினர் கூட்டாக பேட்டி!!

  • Share on

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லேச் செயலாளர் டி.எஸ்.எப். கிப்சன் அணியினர் நேற்று மாலை அலுவலகத்தில் வைத்து பத்திரிக்கையாளரை சந்தித்தனர். அப்போது கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது :-

கடந்த (08.05.2025) அன்று மாலை பொழுதிலே எங்கள் நிர்வாகத்தில் இருக்கக்கூடிய நீதிபதி ஜோதிமணி அவர்களை சந்திப்பதற்கு திருமண்டல அலுவலகம் சென்றிருந்தோம். அப்போது ஏற்கெனவே தேர்தல் நடத்துவதற்காக வந்திருந்த பொழுதிலே இந்த திருமண்டலத்தில் இரண்டு விதமான அணிகள் செயல்பட்டு கொண்டு வருகிறது. ஒன்று டி.எஸ்.எப். அணி மற்றொன்று எஸ்.டி.கே. அணி இரண்டு அணிகளும் ஒவ்வொரு அணிகள் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தன, ஒவ்வொரு முறையும் இரண்டு அணிகள் அளித்த புகாரின் மீது விளக்கம் கேட்கப்பட்டு வந்த நிலையில் நீதிபதி ஜோதிமணி அவர்களை சந்திக்கும் போதெல்லாம் எஸ்.டி.கே. அணியினர் எங்கள் மீது தரப்பட்ட புகார் மீது விளக்கம் கேட்பார்கள் அதற்கான விளக்கங்களை அளித்து வந்த நிலையில் எஸ்.டி.கே. அணிகள் மீது செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் மீது உள்ள புகாரினையும் நீதிபதி ஜோதிமணி ஐயாவிடம் சமர்பித்து வந்துள்ளோம். இது சம்மந்தமாக  அவர்களிடத்திலும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் பேட்டி அளித்திருந்த அருமை சகோதரர்கள் நாங்கள் எல்லோரும் நாங்கள் பெரிதும் மதிக்கிற மதிப்பிற்குரிய நீதிபதி ஜோதிமணி அவர்களை வழிமறித்து தாக்க முயன்றதாகவும், குறிப்பாக சொல்ல வேண்டுமானாலும் தாக்கியதாகவும் தவறான தகவல்களை கடந்த வாரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பதிவு செய்தார்கள். நாங்கள் நீதிபதி அய்யா அவர்களை சந்திக்கும்போது உதவியாளர் தான் எங்களை தாக்க முற்படுகிறார். நீதிபதி ஐயா உதவியாளரை எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லும் போது கூட கேட்காமல் உதவியாளர் தான் எங்களை தாக்க முற்படுகிறார். அதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.

குருமார்கள் எல்லோருக்கும் இடம் மாறுதலுக்கான ஆணையை பிறப்பித்து அசோக் மற்றும் தங்கராஜ் அவர்கள் மிகப்பெரிய குழப்பங்களை டயாசீசில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வந்தனர். தேர்தல் நேரம் என்பதால் இதற்கான ஆணையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி அவர்கள் கூறி வந்த நிலையில் உடனே அசோக் அங்கு இருந்து சென்று விட்டார். உடனே அங்கு வந்த காவல்துறையிடம் புகார் தெரிவித்தோம். அசோக் மற்றும் தங்கராஜ் மற்றும் மோசஸ் ஜெபராஜ் ஆகியோர்  இணைந்து என்னை எச்சரிக்கையாக இருக்கும்படி மிரட்டினார்கள். பத்திரிகை நண்பர்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் எந்த கருத்தையும் நாங்கள் தெரியவில்லை, பேராயர் மற்றும் நீதிபதி அவர்களுக்கு தெரியாமல் இடம் மாறுதல் சம்மந்தமான ஆணையை தயார் செய்து திருமண்டலத்தில் மிகப்பெரிய குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்ச்சிகளை செய்தார்கள். நீதிபதி ஜோதிமணி அவர்களிடம் இது சம்பந்தமான விளக்கங்களை எங்கள் தரப்பில் கேட்டபோது எந்த வித இடமாறுதல் சம்பந்தமான ஆணையை அவர்கள் தயார் செய்யவில்லை என்று கூறியதன் அடிப்படையில் தான் அந்த இடத்தில் விவாதங்கள் ஏற்பட்டது. வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

இடமாறுதல் ஆணை உத்தரவு தங்களுக்கு வந்து இருக்கிறது. என்று டெலிவரி பாய் கூறியதன் விளைவாகத்தான் இப்போது இடமாறுதல் ஆணை தற்போது எதற்காக பிறப்பித்தார்கள் இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு பெற்றுக் கொள்கிறோம் என்று கூறி விட்டோம். எங்களுக்கு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பித்ததற்கான உத்தரவு ஆணை எங்களிடம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை, நீதிபதி ஐயா அவர்கள் எங்களிடம் கூறியது தேர்தல் முடியும்வரை எந்த இடமாறுதல் உத்தரவும் பிறப்பிக்கப்படாது என்று கூறினார்.

ஆனால் இவர்கள் திருமண்டலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொருவருடைய பெயர்களையும் குறிப்பிட்டு இவர்களுக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வந்தார்கள். திட்டமிட்டு செயல்பட்டு வந்த காரணத்தால் தான் அவர்களிடம் இது பற்றிய விளக்கங்கள் கேட்டோம்.

கன்னியாகுமரியில் இருந்து இடைக்கால பொறுப்பாளர்  பேராயர் வந்தபோது பேராயர் அவர்களை முன்னாள் பொறுப்பில் இருந்த எஸ்.டி.கே. ராஜன், ஜெபச்செல்வன், தாமஸ், ஜெபின் ஜான்சன், மோசஸ் ஜெபராஜ், ஆகியோர் பேராயர் அவர்களை சந்தித்து காலை 11 பணியில் இருந்து மாலை வரை அலுவலகத்தில் இருந்தார்கள். அவர்கள் பேராயர் அலுவலகத்தில் மாலை வரை இருக்க வேண்டிய அவசியமில்லை, எங்கள் எதிரணியை சார்ந்த வழக்கறிஞர் கிங்ஸ்டி ஆகியோர் இணைந்து இடமாறுதல் ஆணை பிறப்பித்தது வருகிறார்கள் என்ற தகவல் வந்தது. இதுபற்றி நீதிபதி மற்றும் பேராயர் அவர்களிடம் கேட்ட போது இது தவறான தகவல் என்று கூறினார்கள்.

கடந்த வாரத்தில் பேட்டி அளித்த எஸ்.டி.கே. ராஜன் அணியினர் மற்றும் மோகன் ராஜ் அணியினர் எங்கள் மீது தவறான புகார்களை தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் திருமண்டலத்தில் 10 ஆண்டு காலமாக பொறுப்பு வகித்த போது எந்தவிதமான வளர்ச்சி பணிகளையும் அவர்கள் செய்யவில்லை, டி.எஸ்.எப். துரைராஜ் அவர்கள் பொறுப்பில் இருக்கும் போது தான் கல்லூரி தொடங்கினார். நிறைய பள்ளிக்கூடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை வளர்ச்சி பணிகளில் 11 கோடி வரை செலவு செய்துள்ளோம். நீதிபதி ஜோதிமணி அவர்கள் நாங்கள் மேற்கொண்டுள்ள வளர்ச்சி பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு எங்களை பாராட்டினார். வளர்ச்சி பணிகள் நடைபெறுவதற்கு வழங்கப்படுகின்ற தொகை இதுவரை செக் மூலம் தான் பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் இதில் முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கிறார்கள். இதுவரை உறுதி செய்யப்படவில்லை, தவறான கருத்துக்களை கூறிவருகிறார்கள். வளர்ச்சிப் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கும் மீண்டும் ஒருமுறை ஆண்டவர் எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் இந்த பணிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவு செய்து காட்டுவோம். எங்களுடைய வளர்ச்சிப் பணிகளை பத்திரிக்கை நண்பர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எத்தனை கோடிகளுக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றது என்பதை தாங்கள் தெரியக்கூடும். எங்கள் பணிகள் குறித்து உலகம் அறியும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களிடத்தில் இல்லை, பள்ளிக்கூடங்களின் கட்டுமான பணிகள் சிறப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் எதிரணியை சார்ந்த எஸ்.டி.கே. அணியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பின் போது டேவிட் ராஜ், ஹரிஸ், லிவிங்ஸ்டன், ராபின்ஸ் ஜெபராஜ், எமின்சிங் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.



  • Share on

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதி சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கி அமைச்சர் கீதா ஜீவன் தெருமுனை பிரச்சாரம்!!

இரவு நேரம் என்று பாராது நாரைக்கிணறு கிராமத்திற்கு விரைந்த எம்.எல்.ஏ. சண்முகையா!!

  • Share on

Trending News