தூத்துக்குடி மாவட்ட சட்டமன்ற தொகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் காந்த அதிர்வலை வரைவு உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு, மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியருக்கான புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் 7 கோடி மதிப்பீட்டில் siemens 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள காந்த அதிர்வலை வரைவு உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில், அமைச்சர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் காந்த அதிர்வலை வரைவு (எம்.ஆர்.ஐ. ஸ்கேன்) உபகரணங்களை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், அரசு மருத்துவமனை டீன் சிவக்குமார், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, உறைவிட மருத்துவர் சைலேஷ், குழந்தைகள் நல தலைமை மருத்துவர் பத்மநாபன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
