நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் வள்ளிநாயகபுரம் 4 வது தெருவில் இன்று மாலை நடைபெற்றது

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கி திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை எடுத்து கூறி சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பிரையன்ட் நகர் பகுதி செயலாளரும், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவரும், கவுன்சிலருமான ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பகுதி கழக செயலாளர்கள் போல் பேட்டை ஜெயக்குமார், திரேஸ்புரம் நிர்மல் ராஜ், அண்ணா நகர் ரவீந்திரன், முத்தையா புரம் மேகநாதன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சரவணகுமார், வட்ட கழக செயலாளர்கள் நவநீத கிருஷ்ணன், மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக பேச்சாளர் பாம்பு கிருஷ்ணன் சிறப்புரை, நிகழ்த்தினார். கழக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்தினார்

மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ராஜ்மோகன் செல்வின், புளோரன்ஸ், மேற்கு மண்டல தலைவரும், வழக்கறிஞருமான பாலகுருசாமி, ஆறுமுகம், சுசீ இரவீந்திரன், ஜான் அலெக்சாண்டர், கோட்டு ராஜா இசக்கி ராஜ், பிரையன்ட் நகர் பகுதி அணி அமைப்பாளர்கள் டி.கே.எஸ். ரமேஷ், அந்தோணி ஸ்டாலின், ரூபஸ் அமிர்தராஜ், பார்த்த சாரதி, பரமசிவன், பிரையன்ட் நகர் பகுதி வட்ட கழக செயலாளர்கள் சிங்கராஜ், செல்வராஜ், பாலசுப்பிரமணியன், ரா. சுப்பையா, சுரேஷ், லியோ ஜான்சன், அந்தோணிசாமி, பிரையன்ட் நகர் பகுதி மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, ரெக்ஸிலின், 45 வது திமுக வட்ட பிரதிநிதி கல்யாணி (எ) சிவசுப்பிரமணியன், கழக முன்னோடி கே.பி. முருகானந்தம், 45 வது வட்ட அவைத் தலைவர் ஜெகன் (எ) சுப்பிரமணிய கட்டபொம்மு, திமுக பிரதிநிதி பெரியநாயகம், பிரையன்ட் நகர் பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கி துரை, வைகுண்டபதி பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கழக மூத்த முன்னோடிகள், மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இறுதியில் 49 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைதேகி நன்றியுரை நிகழ்த்தினார்.
