அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடி. பழனிச்சாமியின் 71 வது (மே 12) பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தகவல் தொழில்நுட்ப அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் அண்ணா ஆட்டோ சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து இன்று (11.05.2025) காலை நடைபெற்றது. அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், திருநெல்வேலி தென்மண்டல தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் மந்திர மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் வட்ட கழக செயலாளர் தூத்துக்குடி மணிகண்டன், அண்ணா தொழிற்சங்க பேரவை தூத்துக்குடி மண்டல செயலாளர் கல்வி குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், பொருளாளர் ரமேஷ், தலைவர் ஐயப்பன், மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிரணி உட்பட திரளானோர் மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து கொண்டனர்.
இறுதியில் இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
