வீரசக்க தேவி ஆலய விழா மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு விழா ஆகிய இரு விழாக்கள் இன்று (09.05.2025) முதல் தொடங்கி பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது. 
அதை முன்னிட்டு தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் தலைமையகம் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி நோக்கி புண்ணிய தீர்த்தம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதியை தொடர் ஓட்டம் பேரணியாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு கடந்த 39 ஆண்டுகளாக மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் கொண்டு செல்லப்படுகிறது.
திருச்செந்தூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்ட பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்ட பேரணி திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்காணி, முள்ளக்காடு, முத்தையாபுரம், தூத்துக்குடி கட்டபொம்மன் நகர், குறுக்குச் சாலை, ஓட்டப்பிடாரம், வழியாக புண்ணிய தீர்த்தம் மற்றும் நினைவு ஜோதி பாஞ்சாலங்குறிச்சி சென்றடைகிறது.
மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் கட்டபொம்மன் நகர் வந்தடைந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து, நினைவு ஜோதி மற்றும் புண்ணிய தீர்த்தத்திற்கு புகழ் வணக்கம் மரியாதை செய்து தொடர் ஓட்ட பேரணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், திமுக வட்ட பிரதிநிதி கல்யாணி (எ) சிவசுப்பிரமணியன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, 49 வது வட்ட செயலாளர் நவநீதன், கழக முன்னோடி கே.பி. முருகானந்தம், 45 வது வட்ட அவைத் தலைவர் ஜெகன் (எ) சுப்பிரமணிய கட்டபொம்மன், பகுதி ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ், பகுதி இலக்கிய அணி துணை செயலாளர் நாகலிங்கம், வட்ட செயலாளர்கள் சுரேஷ், சரவணன், பிரையன்ட் நகர் பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கிதுரை, மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப் பெருமாள், வடக்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொமுச செண்பக ராஜ், முருகராஜா, ஜெகவீர ராஜ், ஆனந்த ரமேஷ் பிளவர், விக்னேஷ், மற்றும் திமுக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
