கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஓட்டப்பிடாரத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமியின் அறிவுறுத்தலின் பேரில், ஓட்டப்பிடாரம் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வேலாயுதசாமி தலைமை தாங்கினார். வடக்கு வட்டாரத் தலைவர் விஜய், புதியம்புத்தூர் நகரத் தலைவர் துரைமணி, வடக்கு மாவட்ட மகளிரணி தலைவி தனலட்சுமி, மாவட்டச் செயலாளர் அனிதா, ஆராய்ச்சித் துறை ஒன்றியச் செயலாளர் ஹரி பால கிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் மாவட்டச் செயலாளர் பேரையா, விவசாய அணி மாவட்டத் தலைவர் ராமர், நல்லசாமி, சித்திரபுத்திரன், முருகேசன், ஆத்தியப்பன், ராஜகோபால், கணேசன், ராமசாமி, ஆறுமுகசாமி, லட்சுமண பெருமாள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.