தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட கிருபை நகர் பகுதியில், பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு புதிய ஆட்டோ ஸ்டாண்ட் துவக்கப்பட்டது. 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆட்டோ ஸ்டாண்டை துவக்கி வைத்தார். கடந்த 28 மே 2025 அன்று SRG/Tuticorin/42/2025 என்ற அரசு பதிவு எண்ணின் கீழ் இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கிருபை நகர் பகுதியில் பிரதான வாயிலுடன் புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வரும் 17ஆம் தேதி துவங்கப்பட உள்ள நிலையில், மருத்துவ மனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் எளிய மக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதற்கான ஏற்பாடுகளை அதன் தலைவர் டி. செல்வின் கோவில் ராஜ் மற்றும் கௌரவத் தலைவர் சிவனனைந்த பெருமாள் ஆகியோர் மேற்கொண்டனர். இதில் 15 ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.



மேலும், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மணிகண்ட ராஜா ஆலோசனையின் பேரில் இந்த ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.



புதிய ஆட்டோ ஸ்டாண்ட் துவக்கப்பட்டதன் மூலம் கிருபை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் எளிதாக போக்குவரத்து வசதியை பெற முடியும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.