திருநெல்வேலி ஆர்யாஸ் ஹோட்டல் அரங்கில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கான 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி சார்பில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனுவை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் வழங்கினார்.


தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள், சமூக நலன், பெண்கள் முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த மனுவில் இடம்பெற்றிருந்தன. அவற்றை கவனமாக பரிசீலித்து, தேர்தல் அறிக்கையில் உரிய முக்கியத்துவத்துடன் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி கருணாநிதி உறுதியளித்தார்.


இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், மருத்துவரணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.