தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு மிகுந்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.) செயலாளர் பகுவன்தாஸ் ராவ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் புதிய அலுவலகம் ஜார்ஜ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன் தலைமையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் மாரீஸ்வரன் முன்னிலையில், டி.என்.சி.ஏ. செயலாளர் பகுவன்தாஸ் ராவ் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் எல்.பி.ராயன் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் புதிய இணையதளமும் தொடங்கி வைக்கப்பட்டது. பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களையும், புதிதாக உருவாகி வரும் மகளிர் அணியின் கிரிக்கெட் வீராங்கனைகளையும் அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய டி.என்.சி.ஏ. செயலாளர் பகுவன்தாஸ் ராவ்,
“தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் கிரிக்கெட்டில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏழு வீரர்கள் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடி வருவது பெருமைக்குரியது. மாவட்ட கிரிக்கெட் சங்கம் வழங்கும் ஊக்கம் மற்றும் சிறந்த நிர்வாகத்தால், வரும் காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடுவார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க உதவி தலைவர்கள் டாக்டர் மகிழ் ஜான் சந்தோஷ், உதவி ஜோன்ஸ், சீலன், சங்க செயலாளர் கிறிஸ்பின், பொருளாளர் கணேஷ், இணை செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் ரீகன், அஸ்வின், ரென்விக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்குத் திறமைகள் உருவாகும் – டி.என்.சி.ஏ. செயலாளர் பகுவன்தாஸ் ராவ் நம்பிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி.சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்: தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பிலான கூடுதல் வகுப்பறைகள்!!
அடுத்த
தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் – அடிக்கல் நாட்டல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026