ஸ்ரீசித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஆவணி மாதம் 29-ஆம் தேதியை முன்னிட்டு, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை, சிறப்பு அபிஷேகம், மகா யாகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.



“சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்து விளங்கவும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



இதையொட்டி ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.



பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.