தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையை தொடர்ந்து மாநகரில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு மற்றும் மாநகராட்சி நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புறநகர் பகுதிகளிலிருந்து வரக்கூடிய வெள்ளநீர் மாநகருக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் நீர் ஓட்டம் சீராக இருக்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியின் 16, 17, 18 ஆம் வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகள் நடைபெறுவதால் சில இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. அதனை விரைவாக வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேயர் ஜெகன் பெரியசாமி பண்டாரம்பட்டி மற்றும் ஆதிபராசக்தி நகர் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சங்கரப்பேரி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகளையும் மேயர் கண்காணித்தார். புறவழிச்சாலையில் இருந்து வரும் நீர் சங்கரப்பேரி வடிகாலின் வழியாக பெரிய பள்ளம் ஓடை நோக்கி செல்லும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அந்த பகுதியை தொடர்ந்து கண்காணிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு நிலவரத்தை ஆய்வு செய்தனர்.
மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மழை நீர் வெளியேற்றம் தீவிரம்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி ஆய்வில் முன்னிலை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பூபாலராயர்புரம் மக்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு — அமைச்சர் கீதா ஜீவன் தலையீடு, மழைநீர் அகற்ற நடவடிக்கை வேகம்கொண்டது!
அடுத்த
மச்சாது நகரில் மழைநீர் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் கண்காணிப்பு!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026