தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இடையறாது பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, மச்சாது நகர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை துணை கழிவுநீர் ஏற்றுநிலையத்தின் வழியாக மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி மச்சாது நகர் பகுதியில் நேரில் சென்று மழைநீர் வெளியேற்றப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, துணை கழிவுநீர் ஏற்றுநிலையத்தில் மின் மோட்டார் இடையறாது இயங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்து, மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், மழைநீர் ஓட்டம் வழிமுறையாக நீங்கும் வரை அந்தப் பகுதியில் எச்சரிக்கையாக பணியாற்றுமாறு பணித்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் இணைந்து ஆய்வில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மச்சாது நகரில் மழைநீர் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் கண்காணிப்பு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மழை நீர் வெளியேற்றம் தீவிரம்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி ஆய்வில் முன்னிலை!!
அடுத்த
கருணை அடிப்படையில் அரசு பணி – தூத்துக்குடியில் 7 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026