தூத்துக்குடி 9வது வார்டு பூபாலராயர்புரம் பத்ரகாளியம்மன் கோவில் 2வது தெருவில் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால், சிறிய மழை பெய்தாலே மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த நிலை குறித்து “செய்திக்களம் நியூஸ்” இணையதளத்தில் செய்தி வெளியாகியதும், அதனை உடனே கவனத்தில் எடுத்துக் கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மழைநீர் அகற்றுவதற்கும் கால்வாய்களை சுத்தம் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அமைச்சர் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் தெய்வேந்திரன், 23வது வார்டு கவுன்சிலர் தனலெட்சுமி, மற்றும் திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து 9வது வார்டு பூபாலராயர்புரம் பகுதியில் சென்று கழிவுநீர் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை அகற்றி, வீடுகளில் புகுந்த மழைநீரை அகற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை உடனடியாக ஏற்று செயல்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். பொதுமக்கள் நலனை முன்னிருப்பாகக் கொண்ட அமைச்சர் தலையீடு, தூத்துக்குடி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி
பூபாலராயர்புரம் மக்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு — அமைச்சர் கீதா ஜீவன் தலையீடு, மழைநீர் அகற்ற நடவடிக்கை வேகம்கொண்டது!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"வீர காவலர்களுக்கு மரியாதை – தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு"
அடுத்த
தூத்துக்குடியில் மழை நீர் வெளியேற்றம் தீவிரம்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி ஆய்வில் முன்னிலை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026