நெல்லை மாவட்ட நாயுடு சமுதாய நல சங்கத்தின் துணை செயலாளராக செயல்பட்டு வரும் நெல்லை டவுனைச் சேர்ந்த லயன் ஆர். சக்தி வெங்கடேஷ் அவர்களின் புதல்வி டாக்டர் எஸ். பூஜா சக்தி ரமா (Ph.D) இன்று இஸ்ரோவில் விஞ்ஞானியாக பதவி ஏற்றுள்ளார்.
இந்த பெருமைக்குரிய சாதனையை முன்னிட்டு, தூத்துக்குடி நாயுடு சங்கம் மற்றும் டிரஸ்ட் சார்பில் அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவரின் இவ்வெற்றி, சமூகத்திற்கே பெருமை சேர்ப்பதோடு, இளம் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாழ்த்துகளை சங்கத்தின் செயலாளர் மற்றும் டிரஸ்டி ஆர். ரெங்கசாமி நாயுடு தெரிவித்தார்.