PHYSCOM '26-இன் ஒரு பகுதியாக பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி ஜூலை 30 அன்று சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 11 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடக்கச் சுற்றுகளைத் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட 5 பள்ளிகள் இறுதிச்சுற்றிற்குத் தேர்வு செய்யப்பட்டன.
போட்டியின் வினாடி-வினா நடுவராக, முனைவர் ஜெ. பூங்கொடி செயல்பட்டு, போட்டியை சிறப்பாக வழிநடத்தினார். போட்டியின் முடிவில், அழகர் பப்ளிக் பள்ளி முதல் பரிசையும், தி விகாசா பள்ளி இரண்டாம் பரிசையும், ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் பரிசையும் வென்று சாதனை படைத்தன.
நிகழ்ச்சிக்கு இயற்பியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் திருமதி அ. லூகாஸ் ரெக்ஸ்லின் வரவேற்புரையாற்றினார். இயற்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் மு. ஷீபா நன்றியுரையாற்றினார்.
தொடர்ந்து, வினாடி-வினா நடுவர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இறுதியாக கல்லூரி கீதம் இசைக்கப்பட்டதுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.