தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் பூத் பாகம் முகவர்களுக்கான பயிற்சி முகாம் எப்போதும் வென்றான் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக செயலாளர் போடுசாமி தலைமையேற்றார். அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரதீப் முகவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ கடம்பூர் ராஜூ அவர்கள் முகவர்களுக்கு அரசியல் நிலைமை மற்றும் கட்சி வலுவூட்டும் நடவடிக்கைகள் குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, உற்சாகமான உரையாற்றினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் தனசிங் மகேஷ், விளாத்திகுளம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மோகன், ஓட்டப்பிடாரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்ணன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில்குமார், கோயில்பட்டி கவுன்சிலர் கவியரசன், வேடநத்தம் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனுடன் 20 கிளை செயலாளர்கள், பூத் பாகம் முகவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுக பூத் பாகம் முகவர்களுக்கு வெற்றிக்கான வழிகாட்டல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூரில் நடந்த “இரண்டாம் ஜாலியன் வாலாபாத் படுகொலை” – அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு, கைது செய்ய வேண்டும் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாபு மனு!!
அடுத்த
தூத்துக்குடி வழக்கறிஞர் அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடிய வக்கீல் ரமேஷ் பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026