இந்தியாவில் அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை, மக்கள் தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் வண்ணமயமான பட்டாசுகளுடன் கொண்டாடும் சமயமாகும். இதனை முன்னிட்டு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லூசியா மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாய், தந்தையர் இல்லாத குழந்தைகள் வசிக்கும் அன்புகரங்கள் இல்லத்தில் 200 பேருக்கு சிறப்பு தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திரு. கீதாஜீவன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து, தனியார் ஹோட்டலில் அறுசுவை உணவுடன் அனைவரின் நலனை விசாரித்தனர். பின்னர், 200 பேருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி, தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் வண்ண வானவேடிக்கைகளுடன் தீபாவளி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் கருத்து: “தமிழகத்தில் நல்லாட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் திரு. கீதாஜீவன் ஆண்டு தோறும் எங்கள் காப்பகத்தை வந்து ஆதரவளித்து மகிழ்ச்சி அளிப்பார். இந்நாண்டு கடற்கரை வந்துவிட்டு எங்களோடு உணவருந்தி, புத்தாடைகள் வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்தியதிற்கு நன்றி.”
மேலும், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநில சிறுபாண்மை அணி துணைச் செயலாளர் எஸ்.டி.ஆர். பொன்சீலன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அனுசியா மற்றும் காப்பகத்தின் மானியர்கள் மணியார், அல்பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவு, புத்தாடை, பட்டாசு கொண்டாடிய கீதாஜீவன் – தூத்துக்குடியில் மகிழ்ச்சியுடன் தீபாவளி விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி: ரத்னா காலனி வழித்தடம் மீட்கப்பட்டு பொதுமக்களுக்கு திறப்பு – மேயர் ஜெகன் நடவடிக்கை உறுதி!!
அடுத்த
மழை நெருங்கும் நேரம்... பணிகள் புயல் வேகத்தில்! – ஆய்வில் தீவிரம் காட்டிய மேயர் ஜெகன்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026