தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் வேகமெடுத்து வருகின்றன. இந்த பணிகளை ஒரே நாளில் நான்கு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.
ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்ற மின் மோட்டார் அறை பணிகள், ரஹ்மத் நகர் – ராம் நகர் பகுதிகளில் நூலக கட்டுமானப் பணிகள், குறிஞ்சி நகர் வடிகால் தூர்வாரும் பணிகள், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் செயின்ட் மேரிஸ் பெண்கள் கல்லூரி முன்பாக நடைபெறும் சாலை தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
அவருடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் பவானி, வட்ட கழக பிரதிநிதி மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மழைநீர் தேக்கம் இல்லாமல் பொதுமக்கள் சிரமமின்றி வாழும் வகையில் பணிகளை விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் உத்தரவு வழங்கினார்.
தூத்துக்குடி
மழை நெருங்கும் நேரம்... பணிகள் புயல் வேகத்தில்! – ஆய்வில் தீவிரம் காட்டிய மேயர் ஜெகன்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவு, புத்தாடை, பட்டாசு கொண்டாடிய கீதாஜீவன் – தூத்துக்குடியில் மகிழ்ச்சியுடன் தீபாவளி விழா!!
அடுத்த
தேசிய போட்டிக்குத் தேர்வான மாணவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026