தூத்துக்குடி: மாநகராட்சியில் சில முக்கிய வழித்தடங்களை மீண்டும் ஆக்கிரமித்துள்ள பிரச்சினைக்கு மக்கள் அவசரமாக தீர்வு கோரினர். குறிப்பாக, ரத்னா காலனியிலிருந்து சண்முகபுரம் செல்லும் சாலை, சுமார் 30 வருடங்களுக்கு முன்பு சிலர் சுவர் கட்டி ஆக்கிரமித்திருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு மாநகராட்சியால் அந்த சுவர் அகற்றப்பட்டதும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால், சிலர் மீண்டும் சுவர் கட்டி சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சண்முகபுரம் பகுதியில் இருந்து வி.இ. ரோட்டிற்கு செல்ல பொதுமக்கள் முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சண்முகபுரத்தைச் சேர்ந்த கர்ணன் தலைமையில், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா மற்றும் பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து, ரத்னா காலனி பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி பொதுமக்களுக்கு திறக்க கோரிக்கை வைத்தனர்.
மேயர் ஜெகன், ஆவணங்களைப் பார்த்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் பாரபட்சமின்றி அகற்றப்படும் மற்றும் உடனடியாக சாலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என உறுதி செய்தார்.
மேயர் மேலும் கூறியதாவது, “தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலர் ஆக்கிரமித்திருந்த பல ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.75 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மாநகராட்சிக்கு வரப்பெற்றுள்ளன. சண்முகபுரம் பெருமாள் தெரு, புதுக்கிராமம், மீனாட்சிபுரம், எட்டையாபுரம் ரோடு உள்ளிட்ட பல வழித்தடங்களில் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் புதிய மாற்றங்கள் செய்து வருகிறோம். மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாநகராட்சி நிர்வாகத்திற்கு எந்தவொரு ஆக்கிரமிப்பையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.”
இந்த நடவடிக்கை மூலம், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் எளிமையான போக்குவரத்து வசதி உறுதி செய்யப்பட உள்ளதுடன், மாநகராட்சியின் மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி: ரத்னா காலனி வழித்தடம் மீட்கப்பட்டு பொதுமக்களுக்கு திறப்பு – மேயர் ஜெகன் நடவடிக்கை உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது!!
அடுத்த
மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகளுடன் உணவு, புத்தாடை, பட்டாசு கொண்டாடிய கீதாஜீவன் – தூத்துக்குடியில் மகிழ்ச்சியுடன் தீபாவளி விழா!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026