தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் இன்று 1-வது வார்டு பண்டாரம்பட்டி நியாயவிலை கடை அருகில் நடைபெற்றது.
அன்னை இந்திரா நகர் பகுதி சார்பில் வட்ட செயலாளர் சி. ராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. லூசியா பார்வையற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு இனிப்புகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர்.
அதேபோல், முத்தம்மாள் காலனியில் உள்ள ராஜ முத்துக்கள் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் அன்னை இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கவுன்சிலர் காந்தி மணி துணை செயலாளர் வேல் முருகன், இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் ராஜ், மாவட்ட பிரதிநிதி பூவேஸ் நாதன், மாணவரணி அமைப்பாளர் அன்பு மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரம்பட்டியில் இலவச மருத்துவ முகாம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் கவுன்சிலர் ரெங்கசாமியின் சிறப்பு வாழ்த்து – முன்னணி நாளிதழில் பெரும் வரவேற்பு!!
அடுத்த
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி விழா கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026