தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி நகரம் முழுவதும் வாழ்த்துச் செய்திகளும் பாராட்டுகளும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், முன்னணி நாளிதழில் வெளியிட்ட தனது தனிப்பட்ட வாழ்த்து விளம்பரம் மூலம் பெரும் கவனம் பெற்றுள்ளார் தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி கணக்குகுழு தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ஆர். ரெங்கசாமி.

இன்று (27.11.2025) பிறந்தநாளைக் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலினை “நாளைய நம்பிக்கை நட்சத்திரம், இளைஞர்களின் எழுச்சி நாயகர், இளைய தளபதி” எனத் தழுவி வாழ்த்து தெரிவித்துள்ள ரெங்கசாமியின் விளம்பரம், பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டில் திமுக மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கும் என்பதில் உறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி மலர நாம் அனைவரும் சபதம் ஏற்போம்” என அவர் தனது விளம்பரத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த வாழ்த்து உரையுடன் தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரனும் இணைந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.