தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கும், பெண்ணுரிமைக்கும், சமூக நீதிக்கும் வித்திட்ட மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு தினம் மற்றும் சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மகாகவி பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
அவர்களது திருவுருவப் படங்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட அணி நிர்வாகிகள் அருண்குமார், கவிதாதேவி, பிரபு, நிக்கோலாஸ்மணி, கணேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநகர அணி நிர்வாகிகள் சாரதி, ஜெயக்கனி, முருகஇசக்கி, பரமசிவம், ரூபராஜா, சாகுல்ஹமீது, ராமசந்திரன், வினோத், பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செல்வகுமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, விஜயகுமார், சரவணக்குமார், மகேஸ்வரி, மரியகீதா, வைதேகி, கண்ணன், சந்திரபோஸ், பவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் வட்டச் செயலாளர்கள், பகுதி மற்றும் வட்ட அணி நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.