சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மேயரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி, போல்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சாரதி, வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, சுரேஷ், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, கருப்பட்டி பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.