தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடியில் திமுக சார்பில் நாளை (செப்.12) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நாளை காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.



தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய், மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததுடன், சட்ட மன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையிலும், ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடிக்கும் வகையிலும் செயல்படுவதாக திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப் பாளர்கள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.