“தமிழ்நாட்டில் பாஜக எங்கு பந்து வீசினாலும் அது சிக்சர்தான் என்றும் இந்த டோனமென்டில் சேம்பியன் தமிழ்நாடுதான்!” என்று தமிழக முதலமைச்சர் முக.க. ஸ்டாலின் உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த உரையில், அரசியல் விமர்சனத்தையும் விளையாட்டு உவமையையும் இணைத்து முதல்வர் பேசினார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், “மக்களின் வாழ்க்கையை மாற்றும் திட்டங்கள்தான் உண்மையான சிக்சர்கள்” என்று குறிப்பிட்டார்.
முதல்வர் தனது உரையில்,
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்கப்பட்டதை,
ஓய்வூதிய திட்ட அறிவிப்பை,
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முயற்சியை,
மேலும், ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதை
விளக்கமாக எடுத்துரைத்தார்.
“இவை வெறும் அறிவிப்புகள் அல்ல நேரடியாக மக்களின் கைகளில் சென்ற நலத்திட்டங்கள். இதுவே எங்கள் அணியின் வெற்றி ரன்கள்,” என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உரையின் குறிப்பிட்ட பகுதி – “டோனமென்டில் சேம்பியன் நாங்க தான்” – என்ற வரிகள் கட்சி ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் அந்த வீடியோ பகுதி தனியாக பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வைகளையும் கருத்துகளையும் பெற்று வருகிறது.