பெருந்தலைவர் காமராஜரின் தொண்டர் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா மாப்பிள்ளை யூரணியில் சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி முன்னிலை வகித்தார்.



விழாவை மாப்பிள்ளை யூரணியைச் சேர்ந்த எட்வர்ட் ராஜ் மற்றும் பெத்துராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, நேரு காலனி ஆறுமுகம், அந்தோணி மிக்கேல், சங்கராம்மாள், தெய்வகனி அம்மாள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிவாஜி கணேசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.



விழாவில், “வாழ்க சிவாஜி கணேசன் புகழ்; வாழ்க காங்கிரஸ்” என வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.