தூத்துக்குடி சமூக நல அமைப்பான ALL CAN TRUST சார்பில், தெருவோரம் உணவு இல்லாமல் வாடும் எளிய மக்களுக்கு உணவு வழங்கும் “ALL CAN FEED THE NEEDY” திட்டத்தின் 220வது நிகழ்ச்சி இன்று 8.10.2025 (புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தூத்துக்குடி DELIGHT PUBLIC SCHOOL அவர்களின் சிறப்பான உதவியுடன் நடைபெற்றது. மக்களின் பசி தீர்க்கும் நோக்கில் தொடர்ந்து சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் ALL CAN TRUST இந்நிகழ்வின் மூலம் பல ஏழை, எளிய மக்களுக்கு அன்புடன் உணவு வழங்கியது.
இந்த சேவை நடவடிக்கையை ஒருங்கிணைத்தது லயன் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையிலான குழு. சமூகத்தில் பசியில்லா தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து மனிதநேய பணிகளை முன்னெடுத்து வரும் இவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
"ALL CAN TRUST அமைப்பின் 220வது ‘ALL CAN FEED THE NEEDY’ உணவளிப்பு நிகழ்வு தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது"
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி எஸ்.கே.எஸ்.ஆர் காலனியில் புதிய விளையாட்டுத் திடலுடன் கூடிய பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
அடுத்த
தூத்துக்குடி கடலோர உப்பளத் தொழிலை காப்பாற்ற கோரி முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026