போதை இல்லாத மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தங்களது தனித்திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு கிராமியக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சகா சங்கர் வலியுறுத்தினார்.



மாணவர்களுக்கு இரவு நேர பயிற்சி வழங்கிய அவர், தொலைபேசியை தேவையின்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாணவர்கள் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு, கல்வியுடன் கலைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



மேலும், மாணவர்களிடம் உள்ள தனித்திறன்களை கண்டறிந்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், கிராமியக் கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் கலை ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.



“கலையும் கல்வியும் சகா” என்ற நோக்கத்துடன் மாணவர் களிடையே போதைப் பொருள் தடுப்பு, கைபேசி பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் கலைத் திறன் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை முனைவர் சகா சங்கர் ஏற்படுத்தினார்.