தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் விவசாயிகள் மற்றும் மாணவர்களின் நலனை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து, வழங்கினார்.
இதன் ஒரு பகுதியாக, திலி.தனி 127 – சூரங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுதல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் ராமசந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் முருகன், கூட்டுறவு சங்க செயலாளர் சுசிலா, மாவட்ட பிரதிநிதி செந்தூர்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பெப்பின்காகு, கிளைச் செயலாளர்கள் சடையாண்டி, சந்திரசேகரன், சரவணன், சுந்தர், அழகர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல், திலி.தனி 214 – ராமச்சந்திராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுமானப் பணிகளும் துவக்கி வைக்கப்பட்டன. இதில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் ராமசந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் மகேஷ், கூட்டுறவு சங்க செயலாளர் முருகேசன், ஒன்றிய பொருளாளர் கோசலைராம், ஊர் தர்மகத்தா அஸ்வத்தம்மன், கிளைச் செயலாளர் காந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி முருகேசன், கிளைச் செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பாலமுருகன், விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கனகஜோதி சௌந்தரபாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காளிமுத்து, ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக கட்டுமானப் பணிகள் துவக்கம்; பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆட்டோ விபத்தில் காயமடைந்த பள்ளி குழந்தைகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் – ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா!!
அடுத்த
பெண்களுக்கு பாதுகாப்பும் பொழுதுபோக்கும்: தூத்துக்குடியில் மகளிர் பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026