புரட்சி தலைவர் – புரட்சி தலைவி இணைந்து நடித்த, காலத்தால் அழியாத காவியமாகப் போற்றப்படும் “நம் நாடு” திரைப்படம், அதிரடி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் தூத்துக்குடி நியூ கிளியோபாட்ரா திரையரங்கில் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்பட வெளியீட்டை கொண்டாடும் வகையில், அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், இன்று மாலை திரையரங்கிற்கு நேரில் வந்து திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் மற்றும் ரசிகைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மேலும், தனது சொந்த செலவில் ரசிகர்களுக்கான டிக்கெட் கட்டணத்தையும் செலுத்தி, அவர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தார். ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தை கொண்டாடிய இந்த நிகழ்வு, திரையரங்கில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.