தூத்துக்குடி வி.இ. ரோடு சாலை டி.எஸ்.எப். கிராண்ட் பிளாசா, மற்றும் அழகர் திருமண மஹால் அருகில், தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை எதிர்ப்புறம் புதிதாக கட்டப்பட்டுள்ள மினிஸ்டர் ஒயிட் 46 வது கிளை ஷோரூம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

திறப்பு விழாவில் போத்தீஸ் குழுமத்தின் மினிஸ்டர் ஒயிட் நிர்வாக இயக்குனர் போத்தி ராஜ், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதன்மை அதிகாரி தூயவன், மண்டல அதிகாரி காளிதாஸ், முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஈஸ்வரன், ஜெய்ஷா பனியன் கம்பெனி விநியோகஸ்தர் திருநெல்வேலி திரவியராஜ், எல். ஆனந்த முதலியார் ஜவுளிகடை உரிமையாளர் சண்முக முருகன், மற்றும் மினிஸ்டர் ஒயிட் நிர்வாக இயக்குனர்கள், ஷோரூம் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


