வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநில அரசு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்பின், தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
மாநில அரசுத்துறை அலுவலர்கள், மாவட்ட கலெக்டா் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அனைத்து அரசு துறைகளும் பொதுமக்கள் நலனை முன்னிலைப்படுத்தி பணியாற்றும் பொறுப்பில் இருக்க வேண்டும் எனவும், ஊராட்சி முதல் மாநகராட்சி பகுதிகள் வரை உள்ள குளங்கள், வழித்தடங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
செய்தியாளர்களுடன் பேசும்போது, அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:
மின்சார, நெடுஞ்சாலை, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஜேசிபி வாகனங்கள் மற்றும் மணல் மூட்டைகள் முன்னெச்சரிக்கை வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வருவாய் துறையினர் குளங்களில் நீர்மட்டம் அதிகரிப்பதை கண்காணித்து, உடைந்துவிடாதபடி பராமரிக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் 38 பம்பு அறைகள் மற்றும் 58 மோட்டார் பம்புகள் மழைநீரை வெளியேற்ற தயாராக உள்ளன.
கனமழை வந்தாலும் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து நிலையை சமாளிக்கத் தயாராக உள்ளன.
மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநில புறநகர் மீட்பு குழு 70 பேர் முழு ரெடியான நிலையில் உள்ளது.
முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கோட்டாட்சியர் பிரபு, மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், துணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர் வெங்கட்ராமன், மருத்துவ கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு துறையினரும் கலந்து கொண்டு திட்டமிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிசீலித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை: மாநில மீட்பு குழு 70 பேர் முழு தயார் நிலையில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.எல்.ஏ. எம்.சி. சண்முகையா மணல் மூட்டைகள் ஆய்வில் நேரில் பங்கேற்பு – பருவமழைக்கு முன்னேற்பாடு!!
அடுத்த
தூத்துக்குடியில் 24 மணி நேர மழைநீர் கண்காணிப்பு – மேயர் ஜெகன் பொியசாமி நேரடியாக ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026