தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மாநகராட்சி முழுமையான 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
மேயர் ஜெகன் பொியசாமி பாரதி நகர், முத்துகிருஷ்ணா நகர், ஆதிபராசக்தி நகர், பண்டாரம்பட்டி மற்றும் மச்சாது நகர் பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை துணை கழிவுநீர் ஏற்றும் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்து, பொதுமக்களிடம் ஏற்பட்ட குறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
மேயர் ஜெகன் பொியசாமி கூறியதாவது:
“மாநகராட்சி அதிகாரிகளும் அலுவலர்களும் தொடர்ந்து இந்த பகுதிகளை கண்காணிப்பதுடன், துணை கழிவுநீர் ஏற்றும் நிலையங்களில் மின் மோட்டார்கள் தொடர்ந்து இயங்கும். கடந்த காலங்களில் சில வார்டுகளில் மழைநீர் தேங்கி பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது 11 புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டதால் மழைநீர் கடலுக்கு செல்லும் வழி எளிதாக உள்ளது. சாதாரண மழை பெய்தால் நீர் 3 மணி நேரத்தில் கடலுக்கு செல்லும்.”
மேயர் மேலும் தெரிவித்தார்:
“மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் அடிப்படை பணிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. 16, 17, 18 வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சில இடங்களில் தற்காலிக நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது; ஆனால் அதை வெளியேற்றும் பணிகள் விரைவில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் இருக்கின்றனர். எந்த குறைகளும் இருந்தால் மாநகராட்சி மற்றும் எனது நேரடி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.”
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்ப் உள்ளிட்ட பல மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 24 மணி நேர மழைநீர் கண்காணிப்பு – மேயர் ஜெகன் பொியசாமி நேரடியாக ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை: மாநில மீட்பு குழு 70 பேர் முழு தயார் நிலையில்!!
அடுத்த
ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா யாக வழிபாடு: அன்பும் அமைதியும் நிலவ பிரார்த்தனை – “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026