திருநெல்வேலி பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர், தமிழ் செல்வி தம்பதியரின் மகன் மென் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசுகையில் அந்த இளைஞரை பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மட்டும் பாய்ந்துள்ளது. ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை, அவர்களையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதோடு இவர்கள் யார் என்ற முகம் வெளி உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
ஆணவப் படுகொலைக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற துயர சம்பவம் நடைபெற கூடாது என்று மக்கள் நல உரிமை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து சிறப்பு சட்டம் இயற்றி அதன் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணவப் படுகொலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க முன்வர வேண்டும். என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்துவதாக தெரிவித்து கவின் செல்வ கணேஷ் பெற்றோருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.
தூத்துக்குடி
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வ கணேஷ் இல்லத்திற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சென்று ஆறுதல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆணவப் படுகொலைக்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் திராவிட மாடல் அரசை கண்டித்து மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று புரட்சி பாரதம் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அறிவிப்பு!!
அடுத்த
மூதாட்டியிடம் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026