நெல்லையில் கடந்த 27 ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகமங்கலம் எனும் கிராமத்தை சேர்ந்த இளைஞர் கவின் செல்வகணேஷ் என்பவர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.
இந்த ஆணவ கொலைக்கு பொறுப்பேற்று சுர்ஜித் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சுர்ஜித் என்பவர் மீது வழக்குகள் பதியப்பட்டு தற்சமயம் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இளைஞர் கவின் செல்வகணேஷ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் என்பவரின் தாய் தந்தையர் இருவர்களும் காவல் துறையில் பணி செய்வதாக அறிகிறோம். அவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு திராவிட மாடல் அரசு ஆணவ படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். எனவும் ஆணவகொலை செய்த சுர்ஜித்என்பவர் மீதும் அவரது தாய் தந்தையர் காவல்துறை அதிகாரிகளாக இருப்பதாலும் அவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்திலோ அல்லது வெளியில் வர முடியாத சட்டப் பிரிவுகளிலோ வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனைகள் அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தகுந்த நிதி ஒரு கோடி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும்புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தின் சார்பாக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிப்பட்ட ஆணவ ஜாதி வெறி பிடித்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சரியான தண்டனை பெற்றுக் கொடுக்க விட்டாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவிட்டாலும் ஆணவப் படுகொலைக்கு எதிராக அரசு சிறப்பு தனி சட்டம் நிறைவேற்ற தவறினாலோ திராவிட மாடல் அரசை கண்டித்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்பதை புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக அரசின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். என்று மா. மாரிச்செல்வம் மாவட்ட செயலாளர் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
ஆணவப் படுகொலைக்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் திராவிட மாடல் அரசை கண்டித்து மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று புரட்சி பாரதம் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அறிவிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட மஸ்ஜீதே முகத்தஸ் (சுன்னத்வல்) ஜமா - அத் கமிட்டி கோரிக்கை!!
அடுத்த
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வ கணேஷ் இல்லத்திற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சென்று ஆறுதல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026