தூத்துக்குடி மாநகராட்சியும் வீ கேன் தொண்டு நிறுவனமும் இணைந்து ரோச் பூங்கா கடற்கரையில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி மற்றும் கூட்டு தூய்மைப்படுத்தும் பணி ஆகியவற்றை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி மூலம் கடற்கரையை பாதுகாக்கும் புதிய முயற்சிக்கு துவக்கம் வைக்கப்பட்டது. பசுமையை வளர்ப்பதுடன், கடற்கரையை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டியது பொதுமக்களின் பொறுப்பு என மேயர் வலியுறுத்தினார். மேலும், மக்கள் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கடற்கரையில் எறிவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவ–மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்த முயற்சி, தூத்துக்குடி கடற்கரைக்கு பசுமை போர்வை போர்த்தும் வரலாற்றுச் செயலாகப் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி
"ஒரு லட்சம் பனை விதைகள் – தூத்துக்குடி கடற்கரைக்கு பசுமை கவசம்!"
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அனகாபுத்தூரை அதிரவைத்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் உரை!
அடுத்த
பசுமையும் சுத்தமும் இணையும் விழா – முத்துநகர் கடற்கரையில் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கிய சிறப்பு முயற்சி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026