செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதியின் அனகாபுத்தூர் பகுதியில் 4-வது வட்டக் கழகம் சார்பில் மாபெரும் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கழக பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி திமுக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த கூட்டம், வட்ட கழகச் செயலாளர் வினோத் கிருஷ்ணன் தலைமையிலும், பகுதி கழகச் செயலாளர் வேலாயுதம் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் உரையாற்றி திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தோல்விகளை கடுமையாக சாடினார். அவரது அதிரடி உரையால் கூட்டம் உற்சாகக் களமாக மாறியது.
மேலும், மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லப்பாக்கம் ச.இராஜேந்திரன், தலைமைக் கழகப் பேச்சாளர் சிட்கோ சீனு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அனகாபுத்தூர் அன்னை மேரி தெருவில் நடைபெற்ற இந்த தெருமுனை பொதுக்கூட்டத்தில் ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் பங்கேற்று தலைவர்களின் உரைகளுக்கு உற்சாகக் கைத்தட்டலால் ஆதரவு தெரிவித்தனர்.
தூத்துக்குடி
அனகாபுத்தூரை அதிரவைத்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் உரை!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“கடற்கரை சுத்தம்... கையில் குப்பை பை எடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி”
அடுத்த
"ஒரு லட்சம் பனை விதைகள் – தூத்துக்குடி கடற்கரைக்கு பசுமை கவசம்!"
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026