தூத்துக்குடி இந்துசமய அறநிலைத்துறைக்கு சொந்தமான தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 26 ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி வௌ்ளியன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவையொட்டி சிவன்கோவில் தலைமை அர்ச்சகா் செல்வம்பட்டா் தலைமையில் விமானம் கோபுரம் மற்றும் மூலஸ்தானம் பாிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சாமி தாிசனம் செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றாா். பின்னா் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 2000 க்கும் மேற்பட்ட அறநிலைக்கு சொந்தமான கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதே போல் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் இந்த அரசு மீட்டுள்ளது. இந்துக்களுக்கு ஆதரவாகவே செயல்படும் கட்சியாக திமுக இருந்து வருகிறது. "எல்லோருக்கும் எல்லாம்" என்ற சமத்துவத்தை நாங்கள் உருவாக்கி வளர்த்து வருகிறோம் என்று கூறினாா்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, மற்றும் மணி அல்பட், பக்தா்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்ரீ செல்வ விநாயகா் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் சண்முககையா எம்.எல்.ஏ ஆணைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்!!
அடுத்த
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026