நாடாளுமன்ற குழு தலைவர், திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (31.01.2026 – சனிக்கிழமை) மாலை நடைபெற்றது.


எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளர்கள், அவைத் தலைவர், மாநில பேச்சாளர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மகளிரணி நிர்வாகிகள், மருத்துவர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திமுக செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.