வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதற்கு பிறகு, தூத்துக்குடி மாநகரில் நேற்று இரவு மழை பெய்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் மீண்டும் கனமழை பெய்தது. இதையடுத்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக நகரின் மழைநீர் மற்றும் கழிவுநீர் கான்களின் நிலையை ஆய்வு செய்தார்.
முதலில் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் புதியதாக கட்டப்படுகின்ற கழிவுநீர் கானை பார்வையிட்டு, அருகிலுள்ள மழைநீர் செல்லும் வழிகளை ஆய்வு செய்தார். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகம் பின்பு உள்ள கழிவுநீர் கான்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் 2 கிலோமீட்டர் தூரம் வரை கனமழையில் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில், கழிவுநீர் கான்களில் தண்ணீர் சரியாக செல்கிறதா, மணல் அல்லது தடைகள் உள்ளதா என கம்பு வைத்து கானுக்குள் குனிந்து பார்வையிட்டார். மணல் மற்றும் தடைகள் காணப்பட்ட பகுதிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
மேலும், பிள்ளையார் கோவில் முன்பு மற்றும் இந்திரா காந்தி சிலை அருகே உள்ள கழிவுநீர் கான்களில் நீர் ஓட்டம் குறைவாக இருப்பதை கவனித்து, தடைகளை உடனடியாக அகற்றும் பணிகளை தொடங்க உத்தரவிட்டார். சந்தை ரோடு பகுதியில் நடைபெறும் புதிய கழிவுநீர் கான்கள் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், திமுக வட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், போல் பேட்டை பகுதி திமுக பிரமுகர் பிரபாகர் உள்ளிட்ட பலர் மேயருடன் உடன் இருந்தனர்.
பொதுமக்கள் மேயர் கம்பு வைத்து நேரடியாக கானுக்குள் குனிந்து ஆய்வு செய்வதை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
தூத்துக்குடி
கொட்டும் மழையில் மேயர் நேரடி சோதனை: கம்பு வைத்து கழிவுநீர் கான்களில் குனிந்து ஆய்வு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஜெயலலிதா இருந்தால் சி.வி.சண்முகம் அரசியலிலேயே இல்லாமல் போயிருப்பார் – அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு!!
அடுத்த
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்த ராக்கேஷ் கிஷோருக்கு எதிராக தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026