அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தனது கட்சியின் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அ.தி.மு.க.வின் பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் சி.வி.சண்முகம், ‘தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும் — இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட வழங்குவார்கள்’ என்று கூறியிருப்பது மிகக் கீழ்த்தரமான, பெண்களை அவமதிக்கும் கூற்றாகும்.
இந்தக் கருத்து, அ.தி.மு.க.வுக்குப் பெண்கள் மீது உள்ள வக்கிரத்தையும் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது. ஓர் அரசியல்வாதியாக மட்டுமல்ல, அடிப்படையில் மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருந்திருந்தால் சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியாது; அவர் அரசியலில் எங்கேயும் காணப்படாதபடி அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்,” என அமைச்சர் கீதாஜீவன் கடுமையாக தாக்கியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதார தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அ.தி.மு.க.வுக்குப் பொறுக்காமல் பெண்களை அவதூறாகப் பேசுகின்றனர். திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது; கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் அவர்களின் பங்கு சிறப்பாக வளர்ந்து வருகிறது.
பெண்களை இழிவுபடுத்திய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு ஏராளமாக உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களை அவமதிக்கும் அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் தக்கப் பதிலடி கொடுத்து பாடம் புகட்டுவார்கள்,” என அமைச்சர் கீதாஜீவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
ஜெயலலிதா இருந்தால் சி.வி.சண்முகம் அரசியலிலேயே இல்லாமல் போயிருப்பார் – அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பிரகாசிக்கிறது! — புதிய உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
கொட்டும் மழையில் மேயர் நேரடி சோதனை: கம்பு வைத்து கழிவுநீர் கான்களில் குனிந்து ஆய்வு!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026