தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11 ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
அவரது தியாகத்தை போற்றும் விதமாக தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் வைத்து அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சமூக நீதி போராளி இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்க மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநில பேச்சாளர் சரத் பாலா, மருத்துவரணி அருண்குமார், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், உட்பட கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி இபி காலணி முதல் துரைக்கனி நகா் வரை கால்வாய் சீரமைப்பு பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்!!
அடுத்த
தூத்துக்குடி பண்டாரம் பட்டியில் மக்கள் நல உரிமை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026