தூத்துக்குடி போல்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள போத்தி விநாயகர் கோவில் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவை யொட்டி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி தலைமை வகித்தார். செயலாளர்கள் செல்வராஜ், செல்வகுமார், பொருளாளர் வேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பினர் முத்துச்செல்வம் வரவேற்றார்.



நிகழ்ச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:



எனது தந்தையார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போத்தி விநாயகர் ஆலயத்தை தர்மகர்த்தாவாக இருந்து வழிநடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு எங்களது குடும்பத்தினர் நிர்வாகக் குழுவினருடன் இணைந்து ஆண்டுதோறும் சிறப்பான முறையில் விழாவை நடத்தி வருகிறோம்.



இந்த விழாவில் சுமார் 8 ஆயிரம் பேர் அன்னதானத்தில் பங்கேற்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூருக்குச் செல்லும் பொதுமக்களும் சமபந்தியில் அமர்ந்து உணவு அருந்தியது மகிழ்ச்சியாக இருந்தது.



இந்த பகுதி முன்பு எப்படி இருந்தது, தற்போது எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதற்காக இரவு பகலாகப் பாடுபட்டவர்கள் யார் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அனைவருடைய நலனும் முக்கியம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.



ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கும். அதுபோன்ற வாழ்க்கையில், இத்தகைய இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்று மூன்று மணி நேரம் பழைய, புதிய மற்றும் ஆன்மிகப் பாடல்களைக் கேட்கும்போது, பாடல்கள் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியும் ஒருவிதமான அமைதியும் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.



தெய்வநாயகம் புகழாரம்
விழாவில் தொழிலதிபர் டி.ஏ. தெய்வநாயகம் பேசுகையில், “போத்தி விநாயகர் ஆலயம்தான் பெரியசாமியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் துணையாக இருந்தது. எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டு, பின்னர் அதை செயல்படுத்துவார்.



திறமையான செயல்பாட்டின் மூலம் தனது காலத்தில் ஒவ்வொரு பகுதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கடமை உணர்வுடன் பணியாற்றினார். அவருக்குப் பிறகு அவரது குழந்தைகளான முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகிய இருவரும் தூத்துக்குடிக்கு ஆற்றிய பணிகளை யாரும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.



மழை வெள்ளக் காலங்களில் கீதாஜீவன் ஆற்றிய பணிகளை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். மேயர் ஜெகன் பெரியசாமி பொறுப்புக்கு வந்த பிறகு மாநகராட்சி பகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளும் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளன. புதிய சாலைகள் மற்றும் கட்டமைப்புகள் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.



வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என எது வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் இந்தக் குடும்பத்தினரை மனதார பாராட்டுகிறேன்” என்றார்.



விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கர், பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், பெரியசாமி, சேகர்மணி, கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா, இளையராஜா, ராஜ்குமார், மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இளைஞரணியினர் சக்திகணேஷ், சுரேஷ், மகேந்திரன், கண்ணன், கதிரவன், சுப்புராஜ், இசக்கிமுத்து, பால்ராஜ், பிரபாகரன், கற்குவேல் ராஜ், தொழிலதிபர்கள் தெய்வநாயகம், சந்திரசேகர், மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், செயற்குழு உறுப்பினர் ராஜா, வட்டச் செயலாளர்கள் முனியசாமி, சக்திவேல், காளித்துரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மாநில வஉசி பேரவை தலைவர் கீதா செல்வமாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.