அதிமுக அமைப்பு செயலாளரும், தெற்கு மாவட்ட செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி அருகே பண்டாரவிளையில் உள்ள அதிமுக கழக அலுவலகத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், எஸ்.பி. சண்முக நாதனுக்கு சாக்லேட் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பெருங்குளம் பேரூராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி சண்முகநாதன், ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் திருப்பதி, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்கள் சகாயராஜ், சொக்கலிங்கம், ராஜூ மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், தளவாய் ராஜ், சிதம்பரம், உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.