தூத்துக்குடி உட்பட மாநிலம் முழுவதும் இன்று (செப்டம்பர் 17) சமூக மாற்று சின்னமாக விளங்கிய "வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி" அவர்களின் பிறந்த தினம் மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி சமூக நீதி நாள் ஆகக் கடைப்பிடித்து, சமத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகளை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றன.
சமூகத்தில் நிலவும் ஜாதி, மத, பாலின ஒடுக்குமுறைகளை எதிர்த்து, மனிதர் மனிதராக வாழ வேண்டும் என்ற சிந்தனையை மக்களிடையே விதைத்தவர் தந்தை பெரியார். அவரின் கொள்கைகள் இன்று வரை வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல், சமூக, கல்வி, தொழிற்சங்க அமைப்புகள் உறுதிமொழி எடுத்து, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம் நிலைநாட்டப் பாடுபடுவோம் என்ற உறுதியுடன் நினைவு கூர்ந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் பிறந்த தினம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மயிலாடுதுறையில் நடந்த ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
சமூக நீதி நினைவூட்டிய பெரியாருக்கு நீலம் வணக்கம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026